போலி ஆவணங்களை பயன்படுத்தி சிறுவர்கள் கடத்தல்: 7,500 யூரோ வசூல்!
6 ஆனி 2025 வெள்ளி 14:03 | பார்வைகள் : 4302
இல்-து-பிரான்ஸில், கேமரூனிய (camerounais) கடத்தல் குழு, போலியான குழந்தை வெளிநாட்டு பயண ஆவணங்களை (DCEM) பயன்படுத்தி, சிறுவர்களை பிரான்சுக்குள் சட்டவிரோதமாக அழைத்து வந்துள்ளது.
மாகாண விமான நிலையங்களில் இந்த ஆவணங்களை சரிபார்க்க முடியாத குறைபாட்டை இவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர். 2023 முதல் செயல்பட்ட இந்த குழு, 7,500 யூரோக்கு பெற்றோர்களிடம் பணம் வசூலித்து, 25 சிறுவர்களை போலியான அடையாளங்களில் கொண்டு வந்துள்ளது.
DCEM ஆவணங்களின் பாதுகாப்பு குறைவால், இவர்கள் பல விமான நிலையங்களில் கண்காணிப்பில் சிக்காமல் செயல்பட முடிந்துள்ளது. இந்த விசாரணையின் போது, பரிசில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 8 கேமரூனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலும் அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களாக இருந்தனர். அவர்களில் சிலர், கடத்தலாளர்களுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். விசாரணைக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan