Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இருந்து சென்ற ஶ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்

இலங்கையில் இருந்து சென்ற ஶ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்

6 ஆனி 2025 வெள்ளி 09:35 | பார்வைகள் : 3017


கட்டுநாயக்காவிலிருந்து நேற்று மாலை சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் UL 306, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தைப் பரிசோதித்த பின்னர், குறைபாட்டைச் சரிசெய்ய சில மணி நேரம் ஆகும் எனத் தெரிவித்ததால், பயணிகளை ஹோட்டல் அறைகளில் தங்கவைக்க இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

எனினும், இந்தோனேசிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க அனுமதிக்க மறுத்ததால் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர், இலங்கைத் தூதரின் தலையீட்டால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஶ்ரீலங்கன் விமானத்தைப் பரிசோதிக்க இன்று காலை ஜகார்த்தாவுக்கு இலங்கை தொழில்நுட்பக் குழு ஒன்று புறப்பட்டது.

கோளாறுக்கு உள்ளான விமானத்தில் இருந்த பயணிகளை மீண்டும் அனுப்புவதற்காக இன்று மதியம் 1:45 மணிக்கு மற்றொரு விமானம் புறப்படவுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்