Paristamil Navigation Paristamil advert login

திருடன் தள்ளிக் கூரையிலிருந்து வீழ்ந்த காவற்துறை வீரன்!!

திருடன் தள்ளிக் கூரையிலிருந்து வீழ்ந்த காவற்துறை வீரன்!!

6 வைகாசி 2025 செவ்வாய் 15:30 | பார்வைகள் : 10181


 

வல்-து-மார்னில் (Val-de-Marne) உள்ள ஓர்மெசோன் சூர் மார்னில் (Ormesson-sur-Marne) நேற்று நள்ளிரவின் பின்னர் ஒரு திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அங்கிருந்த கைவிடப்பட்ட உணவகம் ஒன்றிலிருந்து சத்தம் வருவதைக் கண்டு, அயலவர் ஒருவர் காவற்துறையினரை அழைத்துள்ளார்.

காவற்துறையினர் வந்தபோது, அங்கு நான்கு பேர். அந்த உணவகத்தின் கூரையை மூடியிருந்த செப்புத்தகடுகளைத் திருடிக் கொண்டிருந்துள்ளனர்.

காவற்துறையினர் கூரையின் மேலேறி அவர்களைப் பிடிக்க முயன்ற போது, அதில் ஒரு திருடன் ஒரு காவற்துறை வீரனைக் கூரையிலிருந்து தள்ளிவிட, அந்தக் காவற்துறை வீரன் பல மீற்றர்கள் தூக்கியெறியப்பட்டு கீழே வீழ்ந்துள்ளார்.

மற்றைய காவற்துறையினர் இரு திருடர்களைகப் பிடிக்க மற்றைய இருவர் தப்பி ஓடியுள்ளனர்.
கீழே வீழ்ந்த காவற்துறை வீரனிற்கு தோற்பட்டையிலிருந்து இரத்தம் வழிய, தலையிலும் பலமாக அடிபட்டுள்ளது.

அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள, இவர் அடிக்கடி நினைவு தவறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையின் பலமான அடி மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்