"பிரான்ஸில் இனி பாதுகாப்பான இடங்கள் எதுவும் இல்லை": நீதித்துறை அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து!
5 வைகாசி 2025 திங்கள் 18:20 | பார்வைகள் : 6184
நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin "பிரான்ஸில் இனி பாதுகாப்பான இடங்கள் இல்லை" எனும் கூற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
YouTube சேனல் Legend-இன் நேர்காணலில், சமுதாயத்தில் வன்முறை அதிகரித்துள்ளதாகவும், போதைப்பொருள் பிரச்சனைகள் நகரங்களை மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பரவியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சமூகத்தை பாதுகாக்க முக அடையாளம் காணும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துகள் எதிர்க்கட்சியினரிடையே கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. Rassemblement national கட்சியினர் ஜெரால்ட் தர்மனின் ஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்த காலத்தை சுட்டிக்காட்டி, அவரது தற்போதைய குற்றச்சாட்டுகள் இரட்டைத்துணிச்சலானவை என்றும், அவரது செயல்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் "தனது செயல்களில் தோல்வியடைந்து தற்போது பிரெஞ்சு மக்களை முட்டாள்களாக எண்ணி பேசுகிறார்" என்று அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan