பரிஸ் : வீடொன்றில் இருந்து இரண்டு கிரைனைட் குண்டுகள் மீட்பு!!

5 வைகாசி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 3271
பரிசில் உள்ள் வீடொன்றில் இருந்து இரண்டு கிரைனைட் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மே 4, ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
14 ஆம் வட்டாரத்தில் உள்ள Boulevard Arago குடியிருப்பு தொகுதியில் உள்ள முற்றத்தில் இருந்து இந்த குண்டுகள் கிடந்துள்ளன. மாலை 6.30 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் வெடிகுண்டு அகற்றும் படையினரும் வருகை தந்தனர்.
செயற்படும் நிலையில் உள்ள இரண்டு கிரைனைட் குண்டுகளையும் அவர்கள் மீட்டனர். குறித்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு குண்டும் மீட்கப்பட்டது. பின்னர் இரவு 9.30 மணி அளவில் பாதுகாப்பு தடை நீக்கப்பட்டது.
கிரைனைட் குண்டுகள் எங்கிருந்து வந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1