மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு….
3 வைகாசி 2025 சனி 17:53 | பார்வைகள் : 3424
நடிகர் சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு கமல்ஹாசனுக்கு மகனாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இவர்களுடன் இணைந்து திரிஷா, நாசர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படமானது ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது 2025 ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இயக்குனர் மணிரத்னம், லைக்கா நிறுவனத்திடம் ஆர்டிஸ்டிகளின் சம்பளம் தவிர படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் ரூ.100 கோடி என்று கூறியிருக்கிறாராம். இதன் மூலம் இந்த படம் எந்த மாதிரியான படமாக உருவாகி இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan