உள்துறை அமைச்சர் மீது வன்மம் - அபூபக்கர் சட்டத்தரணி!!

3 வைகாசி 2025 சனி 15:05 | பார்வைகள் : 7880
உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யோ மீது வன்மத்தைக்; கக்கியுள்ளார், பள்ளிவாசலில் கொல்லப்பட்ட அபூபக்கர் சிசே எனும் மாலியைச் சேர்ந்தவரின் குடும்பச் சட்டத்தரணி!
அபூபக்கர் சிசேயின் குடும்பத்தாரின் சட்டத்தரணியான யசின் புஸ்ரூ (Yassine Bouzrou), உள்துறை அமைச்சர் கொல்லப்பட்ட அபூபக்கர் சிசேக்குத் தகுந்த மரியாதை வழங்கவில்லை எனவும், அவரின் நடவடிக்கைகள் தாமதமாகவே இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் உள்துறை அமைச்சர், காவற்துறையின் விசாரணையின் அடிப்படையில், கொல்லப்பட்ட அபூபக்கர் சிசே தகுந்த வதிவிட அனுமதி எதுவும் இன்றி சட்டவிரோதமாகவே தங்கி இருந்துள்ளார் எனத் தெரிவித்ததையும், சட்டத்தரணி பெரும் குற்றச்சாட்டாகவும் அவமதிப்பாகவும் நினைத்துள்ளார். ஆனால் காவற்துறையின் விசாரணை உண்மை.
இதனால் அபூபக்கர் சிசேயின் குடும்பத்தினர் யாரும் உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யோவைச் சந்திக்க்கூடாது எனத் தெரிவித்துள்ளார் சட்டத்தரணி யசின்.
உள்துறை அமைச்சர் தான் காவற்துறைக்கும் அமைச்சர். அவரை ஒதுக்கிவிட்டு, இந்தச் சட்டத்தரணி யசின் என்ன செய்யப்பபோகின்றார் எனத் தெரியவில்லை.
இவர்களின் பின்னால் அரசாங்கத்திற்கு எதிராகத் தன் மோசமான அரசியலைச் செய்யும் ஜோன்-லுக் மெலோன்சோன் இருப்பது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1