லோகேஷ் கனகராஜின் புதிய அவதாரம்….
2 வைகாசி 2025 வெள்ளி 16:54 | பார்வைகள் : 2761
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்தது இவரது இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகி இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் 2025 ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்த லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர நடிகை ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்று ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஹீரோவாக வேண்டுமென்று ஆசை இருக்கிறதாம். இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும், முன்னணி இயக்குனர் ஒருவர் அப்படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan