உகந்தமலையில் முளைத்த புத்தர் சிலை மற்றும் பௌத்த கொடி
25 வைகாசி 2025 ஞாயிறு 13:28 | பார்வைகள் : 1631
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில், வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
உகந்தமலையில் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது? என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் மற்றும் பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித்திடமும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலையை நிறுவுவதற்கு முன்னாள் கிழக்கு ஆளுநர் அமைச்சர்கள் முதல் ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக சொல்லப்படுகிறது.
இன மத பேதம் பார்க்கப்படாத இன்றைய அரசாங்கத்தின் கவனத்திற்கு இதனை கொண்டு வருவதாகவும், உரிய நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan