Montmartre: கட்டிடத்தில் பரவிய தீ.. ஆறு பேர் காயம்!!

24 வைகாசி 2025 சனி 16:09 | பார்வைகள் : 5533
மே 24, இன்று சனிக்கிழமை காலை பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Montmartre பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றி தீ பரவியுள்ளது. ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
Rue Lepic வீதியில் உள்ள ஆறு அடுக்கு கட்டிடத்தின் நான்காவது தளத்தில் அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீ பரவியது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்தடைந்த தீயணைப்பு படையினர், கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றினர். தீயில் சிக்கி ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் படிக்கட்டுகளை முற்றாக எரித்து சேதமாக்கியுள்ளது. தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1