ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தின் பத்து வாகனங்கள் சேதம்!

23 வைகாசி 2025 வெள்ளி 14:51 | பார்வைகள் : 3532
Corbeil-Essonnes பகுதியிலுள்ள ABCMG ஓட்டுநர் பயிற்சிக் நிறுவனத்தின் பத்து கார்கள் மே 7 ஆம் திகதி இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறைச் செயலில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இழப்புத் தொகை 50,000 யூரோக்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, டயர்கள் கிழிக்கப்பட்டு, கார்களின் வெளிப்பகுதியில் சுரண்டல்கள் ஏற்பட்டுள்ளன. முதலாளி உடனே காவல் துறையினருக்கு புகார் அளித்ததோடு இது ஒருபோதும் நடக்காத அளவுக்கு கடுமையான சேதம் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் Tarterêts மற்றும் Montconseil பகுதிகள் இடையேயான சண்டையை தொடர்ந்து நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதே இரவில் மொன்கொன்செய் பகுதியிலும் வாகன சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாகனங்கள் சேதமாகி இருப்பதால், ஓட்டுநர் பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சில வாடிக்கையாளர்கள் பணம் திரும்பக் கேட்டுள்ளனர். இதனால் நிறுவனம் 12 நாட்களில் 25,000 யூரோக்களை இழந்துள்ளது. ஊழியர்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு, ஒரு வாரம் மாறிமாறி விடுமுறையில் செல்வதன் மூலம் நிறுவனம் இயங்கும் நிலையைப் பராமரிக்க முயற்சித்து வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1