ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயற்படுகிறதாக பிரான்ஸ்..?? இஸ்ரேலின் குற்றச்சாட்டு!!
23 வைகாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 4124
பிரான்ஸ் ’ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயற்படுவதாகவும்’, ’இஸ்ரேல்-பாலஸ்தீனம் என இரு அரசாங்க கொள்கைகளை ஆதரிப்பதன் மூலம் யூத எதிர்ப்பை தூண்டுவதாகவும்’ இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டினை பிரான்ஸ் உடனடியாகவே மறுத்துள்ளது.
”இந்த குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது. சக ஐரோப்பிய நாடுகளின் வெறுப்பை பிரான்ஸ் மீது திணிக்க இஸ்ரேல் முற்படுகிறது!” என பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noel Barrot தெரிவித்தார். ”இரு அரசு தீர்வை பாதுகாக்கும் எவரும் யூத விரோதத்தை ஊக்குவிப்பதோ அல்லது ஹமாஸை ஆதரிப்பதாகவோ குற்றம் சாட்டுவது அபத்தமானது மற்றும் அவதூறானது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீன மக்கள் பட்டினியால் உயிரிழக்கின்றனர். பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். யுத்தம் கோரமானது. அமைதிக்கு திரும்ப இருவரது கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்க வேண்டும். பாலஸ்தீனியர்கள் அனைவரும் ஹமாஸ் என எண்ணும் போக்கு ஆபத்தானது. பிரான்ஸ் அவ்வாறான நிலையில் இல்லை!” என Jean-Noel Barrot கடிந்து தள்ளியுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan