RATP அபராத தொகை அதிகரிப்பு!

22 வைகாசி 2025 வியாழன் 21:13 | பார்வைகள் : 4842
RATP நிறுவனம், Île-de-France பகுதியில் மோசடிக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க ஜூன் 2ஆம் தேதி முதல் அபராதங்களை உயர்த்துகிறது.
- உடனடி கட்டணம் செலுத்தும் பயணிகளுக்கான அபராதம் 70 யூரோக்கள் ஆகும். இது முன்பை விட 20 யூரோக்கள் அதிகமாகும்.
- 90 நாட்களுக்குள் செலுத்தினால் 120 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
- 120 நாட்களை விட அதிகமானால் 180 யூரோக்கள் ஆகும்.
- பஸ்கள் மற்றும் டிராம்களில் Validate செய்யாத பயணச்சீட்டை அல்லது நவிகோ பயன்பாட்டுக்கு 15 யூரோக்கள் அபராதமாகும். 10 யூரோக்கள் உயர்ந்துள்ளது.
இந்த நடவடிக்கையானது Île-de-France Mobilités நிறுவனத்தின் மோசடிகளுக்கு எதிரான திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆண்டு தோறும் மோசடிகள் காரணமாக பல மில்லியன் யூரோக்கள் இழப்பாகின்றன. வருடத்துக்கு 1.7 மில்லியனுக்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
RATP நிறுவனம் தினமும் 400 முதல் 600 பரிசோதகர்களை அனுப்பி கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறது. பிப்ரவரி மாதம் முதல் 2.7 லட்சம் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு, 11,500 நபர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1