SNCF ஊழியரை அச்சுறுத்திய நடிகர் Omar Sy!!

22 வைகாசி 2025 வியாழன் 18:54 | பார்வைகள் : 6505
SNCF ஊழியர் ஒருவரை தாக்கியதாக பிரெஞ்சு நடிகர் Omar Sy மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விரைவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மே 22, வியாழக்கிழமை காலை இச்சம்பவம் Gare de Lyon தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. தொடருந்து நிலையத்தின் பணிப்பெண் ஒருவருக்கும் குறித்த நடிகருக்கும் இடையே தர்க்கம் எழுந்ததாகவும், அதன் முடிவில் நடிகர் Omar Sy, பெண் ஊழியருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் இன்று காலை கார்-து-லியோன் நிலையத்துக்கு வருகை தந்து, அங்கிருந்து Avignon நகருக்கு பயணப்பட தயாரானார். அங்கு இடம்பெறும் Louis Vuitton ஃபெஷன் ஷோ ஒன்றில் கலந்துகொள்ள புறப்பட தயாராக இருந்த போது, அவர் அழைத்துவந்திருந்த வளர்ப்பு நாய் தடுத்து நிறுத்தப்பட்டது. அதை அடுத்தே குறித்த பணிப்பெண்ணுக்கும் நடிகருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து அது அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1