பாலில் நோய்க்கிருமிகள் - பிரித்தானிய பொதுமக்களுக்கு எச்சரிக்கை

22 வைகாசி 2025 வியாழன் 12:57 | பார்வைகள் : 1980
வட அயர்லாந்தில் பால் விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்று, தனது நிறுவனம் விற்பனை செய்யும் பாலில் நோய்க்கிருமிகள் இருப்பதால், அதை பயன்படுத்தவேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Kenneth Hanna's Farm Shop என்னும் அந்த நிறுவனம், தங்கள் நிறுவனம் விநியோகிக்கும் பாலில், STEC என்னும் ஒருவகை பயங்கர கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த STEC வகை நோய்க்கிருமி, கடுமையான வயிற்றுப்போக்கையும், வயிற்றுவலியையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் சிறுநீரக செயலிழப்புக்கும் ஏன் உயிரிழப்புக்கும் கூட வழிவகுக்கலாம்.
ஆகவே, தங்கள் நிறுவன பாலை வாங்கியுள்ளவர்கள் அதை பயன்படுத்தவேண்டாம் என்றும், அதை திருப்பிக் கொடுத்துவிடவோ அல்லது தூர எறிந்துவிடவோ செய்யுமாறும் அந்த நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பு வட அயர்லாந்துக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1