Peppa Pig குடும்பத்தில் புதிய அங்கத்தவர்.. பிரான்சில் 150 திரையரங்குகளில் சிறப்பு காட்சி!!

21 வைகாசி 2025 புதன் 16:37 | பார்வைகள் : 7509
சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள Peppa Pig கார்டூன் தொடரில் புதிய கதாபாத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிரான்சில் 150 திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தந்தை, தாய் இரண்டு மகன்கள் என நால்வரும், அவர்களது ராமத்திரனையும் கதாபாத்திரமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த தொடர் கடந்த 20 ஆண்டுகளாக சிறுவர்கள் பெரியவர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது. இந்நிலையில், அவர்களது குடும்பத்தில் Evie எனும் புதிய அங்கத்தவர் வருகை தந்துள்ளார். அம்மா பன்றி பெண் குழந்தை ஒன்றை நேற்று மே 20, புதன்கிழமை பெற்றெடுத்துள்ளார்.
இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகியோர் பிறந்த அதே மருத்துவமனையிலேயே அம்மா பன்றி தனது மகளை பெற்றெடுத்துள்ளார்.
இந்த காட்சிகளுக்காக 67 நிமிடங்கள் ஓடக்கூடிய சிறப்பு பகுதி ஒன்று உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது. பிரான்சில் இவ்வாரம் 150 திரைகளில் இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1