இலங்கை கேப்டன் உட்பட மூவரை அணியில் இணைத்த மும்பை இந்தியன்ஸ்

20 வைகாசி 2025 செவ்வாய் 16:03 | பார்வைகள் : 3087
மும்பை இந்தியன்ஸ் அணி மாற்று வீரர்களாக சரித் அசலங்கா உட்பட மூவரை சேர்த்துள்ளது.
ஐபிஎல் 18வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் இன்னும் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை.
டெல்லி கேபிட்டல்ஸ் கடும் சவாலாக இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பிளே ஆப்பிற்கு சென்றுவிட்டால் வில் ஜேக்ஸ் (இங்கிலாந்து), ரிக்கெல்டன், போஷ் (தென் ஆப்பிரிக்கா) ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்களும் விளையாட மாட்டார்கள்.
எனவே அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை மும்பை இந்தியன்ஸ் களமிறக்க வேண்டும்.
அதன்படி, இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா (Charith Asalanka), ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து) மற்றும் ரிச்சர்ட் கிளீஸன் (இங்கிலாந்து) ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1