€400 மில்லியன் செலவில்.. - அமஸோன் காட்டுக்குள் சிறைச்சாலை..!!
19 வைகாசி 2025 திங்கள் 16:21 | பார்வைகள் : 4433
பிரான்ஸ் அவசரமாக மூன்று சிறைச்சாலைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளமை அறிந்ததே. அவற்றில் ஒன்று அமஸோன் காட்டுக்குள் வெளி உலக தொடர்பு இன்றி கட்டப்பட உள்ளது.
பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான French Guiana இல் இந்த சிறைச்சாலை €400 மில்லியன் யூரோக்கள் செலவில் அமைக்கப்பட உள்ளது.
வடமேற்கு பிராந்தியமான அடர்காட்டுக்குள் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது. அங்கு சிறைவைக்கப்படும் கைதிகளை அவர்களது உறவினர்கள் எவரும் வந்து சந்திக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
500 பேர் வரை சிறைவைக்கக்கூடிய குறித்த சிறைச்சாலை 2028 ஆம் ஆண்டளவில் திறக்கப்பட உள்ளது.
மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் என கருதப்படுபவர்கள், பயங்கரவாதிகள் போன்றோர் மட்டும் அங்கு சிறைவைக்கப்பட உள்ளனர்.
சிறைச்சாலை அமைக்கப்பட உள்ள அமஸோன் காட்டுப்பகுதியை பிரான்சின் நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin நேரில் சென்று பார்வையிட்டார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan