சென் நதியில் விழுந்த இளைஞன் மூச்சுத்திணறி பலி!

19 வைகாசி 2025 திங்கள் 15:20 | பார்வைகள் : 2992
சென் நதியில் குதித்த இளைஞன் ஒருவன் மூச்சுத்திணறி பலியாகியுள்ளார். மே 18, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Melun (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 5.30 மணி அளவில் 20 பேர் கொண்ட குழு ஒன்று மோதலில் ஈடுபட்டிருந்தது. காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபடவர்களை கைது செய்ய முற்பட்டபோது, அவர்களில் இருவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் சென் நதியில் குதித்துள்ளனர்.
இளைஞர்களைக் காப்பாற்றும் நோக்கில் காவல்துறையினர் ஆற்றில் குதித்து இளைஞனைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். இருந்தபோதும், இளைஞர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டாவது நபர் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1