Paristamil Navigation Paristamil advert login

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!

10 வைகாசி 2025 சனி 16:34 | பார்வைகள் : 2381


இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டன. வரும் 12ம் தேதி இரு நாட்டுராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், '' என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 3: 35 மணிக்கு அழைத்து பேசினார். அப்போது, இன்று மாலை 5:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பேசுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்