பரிஸ் : கர்ப்பிணி ஒருவர் உட்பட இரு பெண் RATP ஊழியர்கள் மீது தாக்குதல்!

10 வைகாசி 2025 சனி 09:00 | பார்வைகள் : 8756
இரு பெண் RATP ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை இரவு 1 மணி அளவில் இச்சம்பவம் Châtelet நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இரு RATP பெண் ஊழியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அவர்களை நெருங்கிய நபர் ஒருவர் அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார். இதில் கர்ப்பிணி பெண்ணை வயிற்றிலும், தலையிலும் தாக்கியுள்ளார்.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இரு பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் காவல்துறையினர்.
விசாரணைகளை அடுத்து தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். காரணமின்றி தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 150,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1