Paristamil Navigation Paristamil advert login

SNCF தொடருந்து பணிப்புறக்கணிப்பு!!

SNCF தொடருந்து பணிப்புறக்கணிப்பு!!

13 சித்திரை 2025 ஞாயிறு 09:01 | பார்வைகள் : 5349


Sud Rail தொடருந்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, தொடருந்துப் பணியாளர்களின் மற்றுமொரு பாரிய தொழிற்சங்கமான CGT யும் இணைந்து வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

தொடருந்து ஓட்டுனர்களின் பணிநிறைவின் பின்னர் அவர்களிற்கு சிற்ந்த எதிர்காலம் தேவை என்ற தொடர் கோரிக்கை பல மாதங்களாகப் பலனளிக்காமையினால், தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொடருந்து ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் வணிகத் தொடருந்துகளின் ஓட்டுனர்கள் சங்கமும், இணைந்து மேமாதம் 7ம்திகதி மற்றும்  09,10,11 ம் திகதிகளில் முற்றான பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளன.

தெடர்ந்தும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் இது தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்