தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் சூர்யா?

11 சித்திரை 2025 வெள்ளி 13:58 | பார்வைகள் : 1601
நடிகர் சூர்யா, ஏற்கனவே தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில், அவரது அடுத்த படம் இன்னொரு தேசிய விருது பெற்ற இயக்குனரால் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுவது திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சூர்யா தற்போது ’ரெட்ரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 45’ படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பாடல் இசை அமைக்கும் பணிகள் கூட ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இன்னொரு தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், ராம் கூறிய கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்ததால் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
முதல் முறையாக சூர்யா மற்றும் ராம் இணைந்தால், அந்த படம் ஒரு தேசிய விருது அளவுக்குத் தரமுள்ள படமாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1