பிள்ளையானின் கைதை பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
9 சித்திரை 2025 புதன் 10:37 | பார்வைகள் : 3600
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று இரவு பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கொழும்பிலிருந்து வந்த குற்றப்புலனாய்வுத்துறையினர் அவரை கைதுசெய்துள்ளதுடன் உடனடியாக கொழும்புக்கு கொண்டுசெல்லும் பணியையும் முன்னெடுத்திருந்தனர்.
நேற்று இரவு 8.00மணியளில் இந்த கைதுச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கொழும்பு புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இநத கைதுஇடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan