பள்ளிவாசல் கொலை.. கொலையாளி இத்தாலியில் வைத்து சரண்!!

28 சித்திரை 2025 திங்கள் 10:47 | பார்வைகள் : 3819
Gard மாவட்டத்தில் உள்ள La Grand-Combe பள்ளிவாசலில் வைத்து வெள்ளிக்கிழமை காலை கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றிருந்தமை அறிந்ததே. இதில் இஸ்லாமியர் ஒருவர் 50 தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தார்.
தாக்குதலை மேற்கொண்ட இளம் நபர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் இத்தாலியின் டஸ்கனி (Tuscany) மாகாணத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் சரணடைந்துள்ளார்.
மாலி நாட்டு குடியுரிமை கொண்ட இளம் நபரான Aboubakar Cissé என்பவரே கொல்லப்பட்டவர் ஆவர். கைது செய்யப்பட்ட கொலையாளி Olivier H என்பவராவார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1