அரசறிவியல் பல்கலைக்கழகத்தில் வழிமாறும் மாணவர்கள்!!
24 சித்திரை 2025 வியாழன் 12:43 | பார்வைகள் : 4644
அரசறியிவியல் பல்கலைக்கழகமான SCIENCES PO விலிருந்து யாரும் இனி அரசியலிற்கு வரமுடியாது என்றும், எந்தக் கட்சியும் அவர்களை அஙகீகரிக்காது என்றும் குடியரசுக் கட்சியான Les Républicains கட்சியின் செனட்டர் ரொஜே கரூட்சி (Roger Karoutchi) தெரிவித்துள்ளார்.

இது பல விவாதங்களை ஏற்படுத்தினாலும், இந்தப் பல்கலைக்கழக மாணவர்களின் மிதமிஞ்சிய செயலினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
«இது ஒரு அறிவுசார் அழிவு» என இது விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் அரசியலிற்கான அடையாளமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்ந்தது என்றும், மாணவர்கள் மோசமாக வழிமாறிப் போகின்றார்கள் என்றும், செனட்டர் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக பலஸ்தீன மாணவர்களுடன் இணைந்து SCIENCES PO மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மறியல் செய்திருந்தனர். இது ஒரு அறிவுசார் அழிவு என மீண்டும் செனட்டர் விமர்சித்துள்ளார்.
இந்த மாணவர்கள் இப்படியான முறைகேடுகளிற்கு எதிர்வினையாற்றாமல் இருந்தால், இந்த முறையற்ற பயிற்சிநெறியை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan