Paristamil Navigation Paristamil advert login

சிறைச்சாலைகள் : பத்து நாட்களில் 65 தாக்குதல்கள்!

சிறைச்சாலைகள் : பத்து நாட்களில் 65 தாக்குதல்கள்!

24 சித்திரை 2025 வியாழன் 10:00 | பார்வைகள் : 2911


கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதியில் இருந்து பிரெஞ்சு சிறைச்சாலைகள் மீது தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறமை அறிந்ததே. இதுவரை 65 தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் Bruno Retailleau இது தொடர்பில், நேற்று புதன்கிழமை மாலை சில தகவல்களை வெளியிட்டார். ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் நேற்று வரையான பத்து நாட்களில் 65 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். மொத்தமாக 125 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும், அனைத்து குற்றச்செயல்களுக்கு கூட்டாக இயங்கும், ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் எனவும் தெரிவித்தார்.

9 மாவட்டங்களில் இடம்பெற்ற இந்த தாக்குதல்களில் 21 வாகங்கள் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத தடுப்புப்பிரிவினருக்கு (parquet national antiterroriste) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தாக்குதலுக்காக மோட்டார் பட்டாசுகள், இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்