சமூகவலைத்தளமூடாக பயங்கரவாத கருத்துக்களை பகிர்ந்த ஒருவர் கைது!!

24 சித்திரை 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 4993
சமூகவலைத்தளமூடாக பயங்கரவாத கருத்துக்களைப் பகிர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயங்கரவாதத்தை ஆதரித்து கருத்துக்கள் வெளியிட்டதாகவும், அவரது வீட்டில் இருந்து துப்பாக்கிகளை மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Lyon நகரில் வைத்து குறித்த நபர் RAiD படையினரால் கடந்த ஏப்ரல் 16, புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவரது வீட்டில் இருந்து இரண்டு ரைஃபிள் வகை துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமூகவலைத்தளமூடாக சில சமூக விரோத கருத்துக்களை பகிர்ந்ததுடன், ”துப்பாக்கிச்சூடு நடத்தப்படவேண்டும். அவர்கள் கொல்லப்படுவதற்கு தகுதியானவர்கள்” போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1