Paristamil Navigation Paristamil advert login

ஹீரோவாகும் இளம் இயக்குனர்....

ஹீரோவாகும்  இளம் இயக்குனர்....

23 சித்திரை 2025 புதன் 13:54 | பார்வைகள் : 6576


கவின் நடித்த 'ஸ்டார்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எலான், அடுத்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்தும், இயக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தனுஷ் உட்பட பல நடிகர்கள் இயக்குனராக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதீப் ரங்கநாதன், எலான் போன்ற இயக்குனர்கள் நடிகர்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்