மதமும் அரசியிலும் வேறு வேறு - அகதிகள் தொடர்பில் உள்துறை அமைச்சர்!

23 சித்திரை 2025 புதன் 09:05 | பார்வைகள் : 5486
உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெயூ அகதிகள் மற்றும் குடியேற்றம் தொடர்பில், மிகவும் கடுமையான நடவடிக்கைள் எடுப்பதில் பெரும் முனைப்புடன் செயற்படத் தொடங்கியுள்ளார்.
இதே உள்துறை அமைச்சர் பாப்பரசர் பிரோன்சுவா பற்றி மிகவும் நெகிழ்சியாக ஒரு செவ்வியில் தெரிவித்ததோடு அவர் கருணையையும் கிலாகித்திருந்தார்.
இந்தச் செவ்வியில்
«பன்னிரண்டு ஆண்டுகள் பாப்பரசாக இருந்த பாப்பரசர் பிரோன்சுவா, அகதிகள் மற்றும் குடியேற்றவாதிகளின் பாதுகாப்பிற்காகப் பெரும் முயற்சிகள் எடுத்ததுடன், அவர்களை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரை ஆதரிக்கும் நீங்கள், அகதிகள் மற்றும குடியேற்றவாதிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றீர்கள். இது பாப்பரசரின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதே?» எனக் கேள்வி எழுப்பப்பட்டது
«மதநம்பிக்கையும் அரசாங்கமும் வேறு வேறு கட்டளைகள். ஒரு நம்பிக்கை இலட்சியத்தை நிர்ணயிப்பதில் பாப்பரசர்கள் உள்ளனர். ஆனால் கள யதார்த்தத்தில் நாம் தான் உள்ளோம். இதில் நாங்கள் உறுதியாக நடந்து கொள்கின்றோம்»
என உள்துறை அமைச்சர் பதிலளித்து இருந்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1