ஆற்றுக்குள் விழுந்த மகிழுந்து... இரண்டு பிரெஞ்சு நபர்கள் பலி!!
20 சித்திரை 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 3567
மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்ததில் இரு பிரெஞ்சு நபர்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தின் Bruges நகரில் இடம்பெற்றுள்ளது.
73 வயதுடைய நபரும் அவருடைய 13 வயது பேரன் மற்றும் 10 வயதுடைய பேத்தி ஆகிய மூவரும் pont de Warande பாலத்துக்கு அருகே மகிழுந்தில் பயணித்த நிலையில் பிற்பகல் 1.40 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது.
மீட்புக்குழுவினர் துரிதமாக செயற்பட்டுஅவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தபோதும் அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தாத்தா மற்றும் அவருடன் பேத்தி ஆகிய இருவருமே உயிரிழந்ததாகவும், பேரன் தொடருந்து சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூவரும் பிரெஞ்சு நபர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வேறு எந்த வாகனங்களும் தொடர்புபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan