Six Nation ரக்பி! - சாம்பியன் ஆனது பிரான்ஸ்!!
16 பங்குனி 2025 ஞாயிறு 12:00 | பார்வைகள் : 9263
Six Nation ரக்பி இறுதிப்போட்டியில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது பிரான்ஸ்.
பிரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, இத்தாலி, வேல்ஸ் ஆகிய ஆறு தேசங்களுக்கிடையே இடம்பெறும் "Six Nation" ரக்பி போட்டிகளில் இறுதிப்போட்டி Stade de france மைதானத்தில் நேற்று மார்ச் 15 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதில் ஸ்கொட்லாந்து-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டிருந்தன.
போட்டி முடிவில் 35-16 எனும் கணக்கில் பிரான்ஸ் பெரும் வெற்றியைச் சந்தித்தது.
**
2025 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி முதல் நேற்று மார்ச் 15 ஆம் திகதிவரையான நாட்களில் இடம்பெற்றிருந்தது.
ஒவ்வொரு போட்டியினையும் சராசரியாக 70,031 பேர் பார்வையிட்டுள்ளனர். மொத்தமாக 1,050,465 பேர் மைதானங்களுக்குச் சென்று நேரடியாக பார்வையிட்டிருந்தனர்.
1883 ஆம் ஆண்டு Home Nations என ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டிகள், 1910 ஆம் ஆண்டு முதல் Four Nations எனவும், 2000 ஆம் ஆண்டு முதல் Six Nations எனவும் பெயரிடப்பட்டு ஆறு அணிகளுக்கிடையே இடம்பெற்று வருகிறது.
இதே ரக்ஃபி போட்டியில் பெண்களுக்கு என தனி போட்டிகளும் உள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan