ஜனாதிபதி மக்ரோனின் பிரபலத்தன்மை அதிகரிப்பு!!
16 பங்குனி 2025 ஞாயிறு 09:37 | பார்வைகள் : 5796
சர்வதேச விடயங்களில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கவனம் செலுத்த ஆரம்பித்ததன் பின்னர், சரிந்திருந்த அவரது பிரபலத்தன்மை தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் ஜனாதிபதி மக்ரோனது பிரபலத்தன்மை 5 புள்ளிகளால் அதிகரித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் 22 புள்ளிகள் பிரபலத்தன்மையை கொண்டிருந்த அவர், தற்போத் 27 புள்ளிகளை பெற்றுள்ளார்.
ஜனாதிபதி மக்ரோன் அண்மைய நாட்களில் சர்வதேச விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக யுக்ரேனுக்கு ஆதரவாக அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் காரணமாக அவரது பிரபலத்தன்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதமர் பிரான்சுவா பெய்ரு, இரண்டு புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளார். 27 புள்ளிகளில் இருந்து 25 புள்ளிகளாக அவரது பிரபலத்தன்மை குறைவடைந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பை La Tribune Dimanche ஊடகத்துக்காக sondage Ipsos நிறுவனம் நேற்று மார்ச் 12 தொடக்கம் 14 ஆம் திகதி வரை மேற்கொண்டிருந்தது. 18 வயது நிரம்பிய 1,000 பேர் இதில் பங்கேற்றிருந்தனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan