Paristamil Navigation Paristamil advert login

41 நாடுகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் டிரம்ப்

41 நாடுகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் டிரம்ப்

15 பங்குனி 2025 சனி 16:05 | பார்வைகள் : 5648


அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு இரண்டாவது குழு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையை எதிர்கொள்கிறது. மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்