தண்டனை பெற்ற கைதிகள் தங்கள் செலவீனத்தை செலுத்த வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர்!
15 பங்குனி 2025 சனி 11:19 | பார்வைகள் : 5623
குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் தண்டனை பெறும் கைதிகள் தங்களிற்கான செலவைச் செலுத்தல் வேண்டும் என, உள்நாடு மற்றும் பிரான்சின் கடல்கடந்த மாவட்டங்களை உள்ளடக்கிய சுதந்திரக்குழுவான LIOT இன் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ்தொப் நெய்கலன் (Christophe Naegelen) ஒரு பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

«குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு கைதிக்கு, ஒரு நாளைக்கு சராசரி 100 யூரோக்களை அரசாங்கம் செலவிடுகின்றது. பல வருடத் தண்டனையில் உள்ளவர்களிற்கு பல இலட்சம் யூரோக்கள் செலவாகின்றது»
«குற்றம் செய்தவர்கள் இந்தப் பொறுப்பை உணர வேண்டும். தங்கள் குற்றத்திற்கான செலவை ஏற்கவேண்டும்»
«இதற்காக அவர்களை முழுத்தொகையும் செலுத்துமாறு நான் கோரவில்லை. உள்ளே வேலை செய்வதன் மூலம் தங்களிற்கான செலவில் 25 சதவீதத்தை குற்றவாளிகள் செலுத்த வேண்டும்»
என இப் பாராளுமன்ற உறுப்பினர் தனது வாதத்தினை வைத்துள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan