இலங்கையில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு
8 பங்குனி 2025 சனி 06:03 | பார்வைகள் : 9269
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் பொலிஸாருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பிஸ்டோல் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் பொலிஸாருக்கு 4 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைதானால் பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan