La Chaîne Info தொலைக்காட்சி சேவை! - சில தகவல்கள்!!
16 ஆனி 2017 வெள்ளி 18:30 | பார்வைகள் : 23735
எத்தனையோ பிரெஞ்சு தொலைக்காட்சிகள் போல், இதுவும் மிக புகழ்பெற்ற ஒன்று. La Chaîne Info. சுருக்கமாக LCI. தொலைக்காட்சி குறித்த சில செய்திகள் உங்களுக்காக...!!
சகலவித செய்திகளும்.. என்பதுதான் தொலைக்காட்சியின் ஒரே கொள்கை. அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை அத்தனை செய்திகளையும் வழங்குகிறது இந்த தொலைக்காட்சி. இதன் TF1 தொலைக்காட்சியின் ஓர் அங்கம்.
ஜூன் 24, 1994 ஆம் ஆண்டு... இரவு 8.30 மணி... அப்போது '"L'information continue sur LCI" எனும் வசனத்துடன் உதயமாகிறது இந்த தொலைக்காட்சி. இப்போது அந்த வசனத்தை "Vous êtes au cœur de l'info" என மாற்றிவிட்டார்கள்.
8.30 மணிக்கு தொலைக்காட்சியின் முதலாவது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நிகழ்சியை Françoise-Marie Morel தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக இத்தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) Étienne Mougeotte கலந்துகொள்கிறார். LCI தொலைக்காட்சி ஆரம்பித்த நோக்கம் குறித்து உரையாடுகிறார்.
அதன் பின்னர், செய்திகளை மிக சுவாரஷ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தொகுத்து தர ஆரம்பித்தது LCI. மிக குறிப்பாக விவரணப்படங்களில் ஆதிக்கம் செலுத்தியது. அதே போல் செய்திகளை நேரடியாக களமாடியது.
தொலைக்காட்சி பின்னர் 2004 ஆம் ஆண்டு இத்தாலியில் ஒளிபரப்பாக தொடங்கியது. அதன் பின்னர், கடந்த வருடம் 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் அதிகதியில் இருந்து இலவச தொலைக்காட்சியாக மாறியது. அதுவரை காலமும் D2H மூலமும், சாட்டிலைட் மூலமாகவும் வந்துகொண்டிருந்த தொலைக்காட்சி பின்னர் உள்ளூர் கேபிள்களில், 26 ஆம் இலக்கத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
இறுதியாக ஒரு சுவாரஷ்ய சம்பவம். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான Casino Royale திரைப்படத்தில், இந்த தொலைக்காட்சியின் இணையத்தளம் இரண்டு காட்சிகளில் வருகிறது.
அந்த காட்சிக்கு, படத்தயாரிப்பு நிறுவனம் 'கிரெடிட்' கொடுக்கவில்லை என LCI தொலைக்காட்சி வரிந்து கட்டியது!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan