படைத்தலைவன் ஈஃபிளும், 19 படைவீரர்களும்!!
17 ஆனி 2017 சனி 14:30 | பார்வைகள் : 22911
ஈஃபிள் கோபுரத்துக்கு எத்தனை தடவை சென்றுள்ளீர்கள் என்றால்.. நினைவிலேயே இல்லையே என்பீர்கள்.. ஈஃபிள் கோபுரத்துக்கு எதிரே Montparnass கோபுரம் உள்ளது அல்லவா.. அங்கிருங்கு பாருங்கள்.. இராணுவ படைத்தலைவன் போன்று கம்பீரமாக ஈஃபிள் கோபுரமும், படை வீரர்கள் போல் பின்னால் பல உயர கட்டிடங்களும் தென்படும்.
La Défense!!
பின்னே படை வீரர்கள் போல் காட்சியளிக்கும் கட்டிடங்கள் பிரான்சின் மிக முக்கியமான வியாபார நகரமான La Défense நகரம் ஆகும். மொத்த தேசம் 1,400 ஏக்கர்கள். மொத்தமாக 72 கட்டிடங்களும்.. இதில் 19 கட்டிடங்கள் மிக உயரமான கட்டிடங்களுமாகும்.
பிரான்சின் மிக உயரமான கட்டிடங்களின் பட்டியலில் இந்த La Défense நகரில் இருக்கும் கட்டிடங்கள் முதல் பத்து இடங்களுக்கு அடங்கும். இங்கிருக்கும் மிக உயரமான கட்டிடம் Tour First கட்டிடம் ஆகும். மொத்தம் 758 அடி உயரம் கொண்டது இந்த கட்டிடம்.
தவிர 620 அடி உயரம் கொண்ட Tour Total கட்டிடம், 614 அடி உயரம் கொண்ட Tour Gan கட்டிடம், 607 அடி உயரம் கொண்ட Tour F1 கட்டிடம், 600 அடி உயரம் கொண்ட Tiur Grinite கட்டிடமும் அணிவகுத்து நிற்கிறது.
Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள இந்த La Défense நகரத்தில் மொத்த நிரந்த வதிவிட மக்கள் தொகை 25,000. தவிர வருடாந்த சுற்றுலாப்பயணிகளாக 80 இலட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
உலகின் முக்கியமான பணிமனைகள், அலுவலகங்கள், தலைமைச் செயலகங்கள் , இன்னபிற நிறுவனங்களின் செயலகங்கள் என இங்கு எப்போதும் 'பிஸி' !! Société Générale வங்கியின் தலைமைச் செயலகமான இரட்டைக் கோபுரமும் இங்கு தான் உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan