Paristamil Navigation Paristamil advert login

மூடப்படும் Centre Pompidou.. இந்த வார இறுதி நாட்களில் அனுமதி இலவசம்!!

மூடப்படும் Centre Pompidou.. இந்த வார இறுதி நாட்களில் அனுமதி இலவசம்!!

6 பங்குனி 2025 வியாழன் 11:00 | பார்வைகள் : 13504


பரிசில் உள்ள நவீன ஓவியத்துகான கண்காட்சியகமான Centre Pompidou (பரிஸ், 4 ஆஅம் வட்டாரம்) திருத்தப்பணிகளுக்காக மூடப்பட உள்ளன. அதை அடுத்து இந்த வார இறுதியில் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Centre Pompidou வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மூடப்பட உள்ளது. திருத்தப்பணிகளுக்காக அடுத்த ஐந்து வருடங்கள் அது மூடப்படுவதாகவும், அங்குள்ள ஓவியங்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மார்ச் 8 மற்றும் 9 ஆம் திகதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்