புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து! சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி
3 சித்திரை 2025 வியாழன் 12:29 | பார்வைகள் : 4405
கிரீஸ் தீவொன்றின் அருகில் காலை புலம்பெயர்ந்தோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிரீஸ் தீவுகளில் ஒன்றான Lesbos தீவுக்கும் துருக்கிக்கும் இடையில் புலம்பெயர்ந்தோர் சிலர் ஒரு படகில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், இன்று காலை அந்த படகு திடீரென கவிழ்ந்துள்ளது.
கிரீஸ் கடலோரக் காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், தண்னீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 23 பேரை மீட்டுள்ளார்கள்.
ஆனால், ஏழு பேர் வரை தண்ணீரில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது. சில ஊடகங்கள் நான்கு பேருடைய உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் உடலும், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமியின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூன்று படகுகள் மற்றும் ஒரு விமானப்படை ஹெலிகொப்டர் ஆகியவை தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
அந்த படகு எப்படி கவிழ்ந்தது, அதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan