அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும்- ஆயத்தொல்லா கமேனியின் ஆலோசகர்
2 சித்திரை 2025 புதன் 16:23 | பார்வைகள் : 2602
அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டால் ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் என ஈரானின் ஆன்மீக தலைவரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆயத்தொல்லா அலி கமேனியின் ஆலோசகருமான அலி லரிஜானி இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது நடத்தையை மாற்றவேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
சாகோஸ் தீவின் டியாகோகார்சியா தளத்தில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் ஈரான் மீது குண்டுவீசினால் அல்லது இஸ்ரேலை குண்டுவீச்சில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டால், அது ஈரான் வேறு விதமான முடிவை எடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என அலி லரிஜானி தெரிவித்துள்ளார்.
ஈரான் எடுக்கும் முடிவு அமெரிக்காவின் நலன்களிற்கு உகந்ததாக அமையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுவிவகாரம் தொடர்பில் அமெரிக்கா தவறிழைத்தால்,ஈரான் தன்னை பாதுகாப்பதற்காக அணுவாயுதங்களை நோக்கி நகரவேண்டிய நிலையேற்படும் என ஈரானின் ஆன்மீக தலைவரி;ன் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ஈரானிற்கும் அதன் ஆதரவு சக்திகளிற்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா டியாகோ கார்சியாவில் உள்ள தனது தளத்திற்கு அதிநவீன போர் விமானங்களை அனுப்பியுள்ளது.
அணுவாயுதங்களை உருவாக்குவதை தடை செய்து கமேனி பிறப்பித்த மத ஆணையை ஈரான் பின்பற்றுகின்றது என தெரிவித்துள்ள லரிஜானி ஆன்மீக தலைவரின் பட்வா நாங்கள் அணுவாயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்கின்றது,பட்வா என்பது அரசியல் உத்தரவுகளில் இருந்துவேறுபட்டது, அவரின் இந்த கடிதத்தை ஏற்கனவே ஐநாவிற்கு அனுப்பியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்ந்தும் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் உள்ளது அமெரிக்காவின் இராணுவநடவடிக்கை இதனை மாற்றலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan