'டிமான்டி காலனி' படத்தின் 3ஆம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்..!

2 சித்திரை 2025 புதன் 14:20 | பார்வைகள் : 4323
தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் இயக்கத்தில் உருவான முதல் இரண்டு பாகங்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'டிமான்டி காலனி' படத்தின் முதல் பாகம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து, 2024ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ₹85 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது 'டிமான்டி காலனி 3' உருவாக இருப்பதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் இது தொடர்பான தகவலுடன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை அவர் வெளிநாட்டில் இருந்து தனது குழுவினரிடம் எடுத்து அனுப்பியுள்ள நிலையில், மூன்றாம் பாகம் அனேகமாக வெளிநாட்டு கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் இரண்டு பாகங்களில் நடித்த அருள்நிதி மீண்டும் நாயகனாக நடிக்க, ப்ரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் இதில் இணைந்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில், இந்த படம் உருவாக இருப்பதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து குறிப்பிட்டுள்ளார்.
முதல் இரண்டு பாகங்கள் போலவே, மூன்றாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1