Paristamil Navigation Paristamil advert login

பரபரப்பான ஆட்டத்தில் ஜேர்மனியின் பாயர்ன் முனிச் த்ரில் வெற்றி

பரபரப்பான ஆட்டத்தில் ஜேர்மனியின் பாயர்ன் முனிச் த்ரில் வெற்றி

30 பங்குனி 2025 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 1594


பண்டஸ்லிகா ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Allianz Arena மைதானத்தில் நடந்த போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் எப்சி செயின்ட் பவுலி அணிகள் மோதின.

ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே பாயர்ன் நட்சத்திர வீரர் ஹாரி கேன் கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து, எப்சி செயின்ட் பவுலி (FC St. Pauli) வீரர் எலியாஸ் சாத் அபாரமாக கோல் அடித்தார்.

பின்னர் அதிவேகமாக செயல்பட்ட லெரோய் சனே (பாயர்ன் முனிச்) 53வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

அவரே 71வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து மிரட்டினார். கடைசி கட்டத்தில் எப்சி செயின்ட் பவுலி அணிக்கு லார்ஸ் ரிட்ஸ்க்கா மூலம் இரண்டாவது கோல் (90+3) கிடைத்தது.

ஆனாலும் பாயர்ன் முனிச் 3-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.   

 

வர்த்தக‌ விளம்பரங்கள்