பாரதி ராஜாவின் மகன் மனோஜின் உடல் தகனம்!
26 பங்குனி 2025 புதன் 14:25 | பார்வைகள் : 9316
இத்தனை வருட திரை உலக பயணத்தில், எந்த ஒரு சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்காத சிறந்த மனிதர், மனித நேயம் மிக்கவர் என பெயரிடுத்த மனோஜ் பாரதிராஜாவுக்கு, திரையுலகமே கூடி வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர். அதேபோல் ரஜினிகாந்த், டி ராஜேந்திரன், உள்ளிட்ட பாலர் அறிக்கைகள் மூலம் தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.
மேலும் கருணாஸ், கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் மணிரத்தினம், நாசர், பி வாசு, நடிகர் விதார்த், கவுண்டமணி, செந்தில், ராதிகா, சரத்குமார், ராதா, ஸ்டாலின் முத்து, சந்தான பாரதி, கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, கார்த்தி, தளபதி விஜய், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரடியாக வந்து மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி தன்னுடைய ஆறுதலை பாரதி ராஜாவுக்கும் - அவருடைய குடும்பத்திற்கும் தெரிவித்தனர்.
மேலும் மு க ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து வீட்டில் இறுதி குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, வேன் மூலம் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட மனோஜ் பாரதிராஜாவின் உடல் அங்கும் இறுதி சடங்கு மற்றும் சாங்கியங்கள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.
மின் மயானம் வரை வந்து, வெற்றிமாறன், சீமான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் பாரதி ராஜா நடக்க முடியாமல் வந்து தன்னுடைய மகன் மனோஜ் பாரதி ராஜாவுக்கு கண்ணீரோடு விடைகொடுத்துள்ளார். தீராத துயரத்துடனும் மனோஜின் உடல் தகனம் செய்யப்பட்டு காற்றோடு கரைந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan