இலங்கையில் சுவர் இடிந்து விழுந்து இளம் பெண் மரணம் - காதலனின் வீட்டில் விபரீதம்

24 பங்குனி 2025 திங்கள் 15:01 | பார்வைகள் : 7617
களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதான பிரசாதினி பிரியங்கிகா என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை பனாபிட்டியவில் உள்ள தனது காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காதலன் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு உணவினை வழங்குவதற்காக வீட்டின் பின்னால் சென்றிருந்த வேளை, அந்த நேரத்தில் பிரியங்கிகாவும் வீட்டின் பின்னால் உள்ள சுவர் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த போது, பிரியங்கிகா அதில் சிக்கிக்கொண்டார்.
குடியிருப்பாளர்கள் உடனடியாக பிரியங்கிகாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் உயிரிழந்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1