பெருவில் அவசரகால நிலை பிரகடனம்
19 பங்குனி 2025 புதன் 04:55 | பார்வைகள் : 10967
பெருவில் பிரபல பாடகரான பால் புளோரஸ் (16) கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பாரிய கலவரமாக வெடித்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி டினா போலுவார்டே (Dina Boluarte) தலைநகர் லிமாவில் அவசர கால நிலையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
குறித்த அவசர கால நிலை உத்தரவு எதிர்வரும் 30 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருவில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 1 முதலாம் திகதி முதல் மார்ச் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 459 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்துறை அமைச்சர் ஜுவான் ஜோஸ் சாண்டிவானெஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரியுள்ளனர் எனவும், இது தொடர்பான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan