ஆப்கானில் வானொலி சேவைக்கு தடை - பெண் ஊடகவியலாளர்கள் கைது

10 மாசி 2025 திங்கள் 09:27 | பார்வைகள் : 4917
ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்கள் ஒரேயொரு வானொலி நிலையத்திற்குள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தலிபான்கள் அந்த வானொலி சேவையை தடை செய்துள்ளனர்.
பெண்கள் நிர்வகித்த,பெண்கள் கல்வி தொடர்பான விடயங்களை வெளியிட்டு வந்த காபுலை தளமாக கொண்ட ரேடியோ பேகம் என்ற வானொலி சேவை அலுவலகத்திற்குள் நுழைந்த தலிபானின் தகவல் கலாச்சார அமைச்சரவையின் அதிகாரிகள் ஊடகவியலாளர்களை தடுத்துவைத்த பின்னர் ஊடக நிறுவனத்தின் அலுவலகங்களை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது தலிபான் அதிகாரிகள் கணிணிகளை வன்தட்டுகள் கோப்புகள் கையடக்க தொலைபேசி கைப்பற்றிதுடன் , இரண்டு பெண் ஊடகவியலாளர்கள் உட்பட கைதுசெய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட வானொலி நிலையத்தின் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதை தலிபானின் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அந்த வானொலி நிலையம் ஒலிபரப்பு கொள்கையை வானொலி அனுமதிப்பத்திர உரிமையை மீறியது என தெரிவித்துள்ள தலிபான் அதிகாரிகள் எதிர்காலத்தில் அந்த வானொலி நிலையம் குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
தலிபான்களின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ள எல்லைகள் அற்ற பத்திரிகையாளர்கள் சங்கம் தலிபான்கள் இந்த தடையை மீளப்பெறவேண்டும் என தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்படுவதற்கு முன்பு குறித்த வானொலி ஆப்கான் பெண்களிற்கான சுகாதாரம் உடல்நலம் கல்வி போன்ற நிகழ்ச்சிகளை ஆறு மணிநேரம் ஒலிபரப்பிவந்தது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1