அஜித்தின் அடுத்த படத்துடைய இயக்குனர் யார்?
8 மாசி 2025 சனி 12:39 | பார்வைகள் : 4549
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜர்பைஜானில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது. அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதேபோன்று விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கலாம் என்றும் பேசப்பட்டது.
மேலும், மகிழ் திருமேனியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற அஜித் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனால் 'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது அஜித் கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும், மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதாவது 'குட் பேட் அக்லி' படம் வெளியான பிறகுதான் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளிவந்துள்ளன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan