கடைசிவரை களத்தில் நின்ற குசால் மெண்டிஸ் - கௌரவ ஸ்கோரை எட்டிய இலங்கை

7 மாசி 2025 வெள்ளி 09:50 | பார்வைகள் : 3357
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி 257 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
காலியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 150 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என தடுமாறியது.
தினேஷ் சண்டிமல் (Dinesh Chandimal) 74 ஓட்டங்கள் எடுத்தபோதும், இலங்கை அணி 200 ஓட்டங்கள் எட்டுமா என்ற கேள்வி எழுந்தது.
அப்போது விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் (Kusal Mendis) மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 257 ஓட்டங்கள் என்ற கௌரவ ஸ்கோரை எட்டியது. குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 85 (139) ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலியாவின் தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், லயன் தலா 3 விக்கெட்டுகளையும், ட்ராவிஸ் ஹெட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1