Paristamil Navigation Paristamil advert login

Gare d'Austerlitz நிலையத்தில் துப்பாக்கிச்சூடு... இருவர் காயம்!

Gare d'Austerlitz நிலையத்தில் துப்பாக்கிச்சூடு... இருவர் காயம்!

3 மாசி 2025 திங்கள் 18:03 | பார்வைகள் : 13293


13 ஆம் வட்டாரத்தில் உள்ள Gare d'Austerlitz நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நபர் ஒருவர் ஸ்பிரே மூலம் ஸ்வாதிகா இலட்சணையை தொடருந்து நிலையத்தில் எழுத முற்பட்டுள்ளார். அதனை தடுத்து நிறுத்த தொடருந்து பாதுகாவலர்கள் வருகை தந்த போது, திடீரென அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். துப்பாக்கியை கீழே போடும் படி அவர்கள் பணித்த நிலையில், அவர் துப்பாக்கியால் சுடுவது போன்று பாவனை செய்துள்ளார்.

அதை அடுத்து தொடருந்து நிலைய பாதுகாவலர்கள் (SUGE) அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்துள்ளதுடன், பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

பின்னர் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

ஸ்வாதிகா இலட்சணை என்பது நாஸிப்படையினருக்குரிய யூத மதத்துக்கு எதிரானதாகும். குறித்த நபர் கைகளில் வைத்திருந்தது ஒரு போலியான துப்பாக்கி என பின்னர் தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்